ஆவடி சட்டமன்ற அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு ஆட்டோ.. அமைச்சர் மா பா க பாண்டியராஜன் அவர்கள் துவக்கிவைத்தார்...

ஆவடி: ஆவடி சட்டமன்ற அலுவலகத்தில் இன்று கொரோனா 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டகோவில் பணியாளர்களுக்கு  நிவாரண பொருட்கள் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா பா க பாண்டியராஜன் அவர்களால் வழங்கப்பட்டது. இதில் ஆவடி நகர கழக செயலாளர் R.C. தீனதயாளன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பிறகு,வேலம்மாள் குரூப் & டெக்னாலஜி ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு கலந்த ஓவிய ஆட்டோவை அமைச்சர் மா பா க பாண்டியராஜன் அவர்கள் துவக்கிவைத்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தார் மாணவர்கள் தற்போது தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது மாணவர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மருத்துவப் பணியாளர்களை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் இது காலதாமதம் இருந்தாலும் வரவேற்கத்தக்கது என கூறினார்.

© All Rights NEW STAR TREND PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited