பட்டாபிராம் 41 வது வார்டில் அமைச்சர் மா பா க பாண்டியராஜன் அவர்களின் தலைமையில் ஏழை எளியவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்

ஆவடி :ஆவடி மாநகராட்சி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உள்ள காமராஜபுரம் M. P பழணிஸ்ரீதேவி 41-வது வார்டு வட்டச் செயலாளர் அவர்களின் ஏற்பாட்டில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா பா க பாண்டியராஜன் அவர்களின் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார் இதில் கட்சி நிர்வாகிகள் P. கிருஷ்ணமூர்த்தி,
M.அருள்தாஸ்,பொன்.விஜயகுமார், பாண்டுரங்கம், P. கோவிந்தசாமி கோவிந்தராஜலு, விஜயா, சந்தோஷ்குமார், G.லட்சுமி, 
G.பாலமுருகன், C.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டார்.
 இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாபா க  பாண்டியராஜன் அவர்கள் மாணவர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் என்றும், தேர்வுகள் முடிந்து விடுமுறை எடுக்க வேண்டும் என்ற மன நிலையில் மாணவர்கள் உள்ளனர் என்றும், சுழற்சி முறையில் கலை அறிவியல் கல்லூரி வகுப்புகளை நடத்த மத்திய அரசு தடை விதிக்காது என்று நம்புகிறோம் என்றும் அமைச்சர் மாபா க பாண்டியராஜன் அவர்கள் கூறினார்.


 செய்தியாளர் R சதீஷ்குமார் மற்றும்
P சரவணன்
©All Rights Reserved NEW STAR TREND Private Limited 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited