பட்டாபிராம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த 21 வயது கர்ப்பிணி பெண் - கொரோனா தொற்று உறுதி

ஆவடி மாநகராட்சி பகுதியில் கர்ப்பிணி உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியை சேர்ந்த 56 வயது நபர், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த 55 வயது மற்றும் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் என இவர்கள் 4 பேரும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர்.

இவர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. அதேபோல் பட்டாபிராம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த 21 வயது கர்ப்பிணிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஊத்துக்கோட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்த பிஸ்கட் வியாபாரியின் மகளான 21 வயது கர்ப்பிணி, பிரசவத்துக்காக சென்னை சூளைமேட்டில் இருந்து தாய் வீட்டுக்கு வந்து உள்ளார். நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டதால் ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பரிசோதனை செய்ததில் நேற்று கொரோனா தொற்று உறுதியானது.


228 பேருக்கு சிகிச்சை

உடனடியாக கர்ப்பிணி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிஸ்கட் வியாபாரி, அவரது மனைவி இருவரும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

இவர்களுடன் சேர்த்து திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 290 ஆனது. இவர்களில் 61 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்து உள்ளார். 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited