ஊரடங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியாற்றும் ஆவடி வள்ளலார் பசியாற்றும் மையம்

*ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு* *பசியாற்றும் ஆவடி வள்ளலார்* *பசியாற்று மையம் .*

ஆவடி"செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி அருகில் தனியொரு குடும்பத்தினர்  ஊரடங்கால் உணவுக்காக திண்டாடுபவர்களுக்கு  தினமும் 250 பேருக்கு இலவசமாக உணவு அளித்துவருகின்றனர்.


ஆவடியை சேர்ந்த தம்பதிகள் திரு.வை.ஜெயக்குமார் , ஜெ.வசந்தி.
இவர்கள் கடந்த மூன்றாண்டுகளாக தங்கள் பகுதியில் வறுமையால் வாடும் முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு "வள்ளலார் பசியாற்று மையம்" என்றப் பெயரில் தினமும் 100 ஏழை,எளியோருக்கு தாங்களே தங்கள் வீட்டின் ஒரு பகுதியில் உணவு தயாரித்து வழங்கி வந்துள்ளனர்.

இந் நிலையில் ஊரடங்கால் இங்குள்ள மக்களின் இயல்புவாழ்க்கை இழந்து வறுமையால் பசியோடு இங்கு வந்து தினமும் இருநூறுக்கும்  மேலானோர் வந்து உணவு வாங்கி உண்டு மகிழ்கின்றனர்.

இவர்களின் குடும்பத்தார் அனைவருமே இதற்காக தினமும் உதவியாக இருந்து வருகின்றனர்..அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அருளாலும், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவாலும் இப்பணியைத்  தங்களுக்கு கிடைத்தப் பாக்கியமாக செய்வதாக இத்தம்பதியினர் மகிழ்ச்சியோடு கூறுவதைக் கேட்கும்போது உலகில் மனிதநேயம் இன்னும் இருக்கின்றது என்பதை உணரமுடிகின்றது.
செய்தியாளர் : சதிஷ்
   அய்யப்பாக்கம், சென்னை
©All Rights NEW STAR TREND Private Limited Reserved 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited