ஆவடி தொகுதியில் காவல்துறையினரை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசை வழங்கினார் அமைச்சர் மாஃபா க பாண்டியராஜன் அவர்கள்

ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆவடி திருமுல்லைவாயில் பட்டாபிராம் திருவேற்காடு உள்பட 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் காவல்துறையினரை கௌரவிக்கும் வகையில் நேரில் சென்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா க  பாண்டியராஜன் அவர்கள் பாராட்டினார். அத்துடன் கபசுர குடிநீர் பொடி,  சோப்பு, சானிடைசர், நினைவு பரிசு, பொன்னாடை கொண்ட பொருட்களின் தொகுப்பை தாம்புல தட்டில் வைத்து காவல் துறையினருக்கு வழங்கினார்.


   இதற்கிடையே அம்பத்தூர் காவல் துறை  ஆணையர் அலுவலகத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட இணை ஆணையர் விஜயகுமாரி மற்றும் அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மற்றும் வட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited