ஆவடி அடுத்த பட்டாபிராம் மற்றும் திருநின்றவூர் பகுதியில் அமைச்சர் மாபா க பாண்டியராஜன் அவர்களால் 500 மேல் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன

ஆவடி:ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ள 42 ஆவது வார்டு R.ஆதிகேசவன் ஆவடி மாநகர கழக மாணவரணி செயலாளர் அவர்கள் தலைமையிலும் மற்றும் 43 வது வார்டு டி ஆர் கண்ணன் வட்டக் கழக செயலாளர் அவர்கள் தலைமையிலும் மற்றும் 38 வது வார்டு எம் ஆர் கிருஷ்ணன் வட்ட கழக செயலாளர் அவர்கள் தலைமையிலும் மற்றும் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையிலும் மற்றும் திருநின்றவூர் பகுதிக்கு உட்பட்ட 4 வது வார்டு பாரதிதாசன் வட்ட கழக செயலாளர் அவர்கள் தலைமையிலும் மற்றும் 5 வது வார்டு தேவ அன்பு வட்ட கழக செயலாளர் அவர்கள் தலைமையிலும் -  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாபா க பாண்டியராஜன் அவர்களால் 500 மேல் குடும்பங்களுக்கு ஏழை எளியவர்களுக்கும் அரிசி பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது ஆவடி மாநகர கழக செயலாளர் ஆர் சி தீனதயாளன் அவர்களும் உடன் இருந்தனர். இதில் வட்ட கழக செயலாளர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வின் போது
 அமைச்சர் மாபா க பாண்டியராஜன் அவர்கள் பொதுமக்களுக்கு " *விழித்திரு  விலகிரு வீட்டிலிரு* " என்றும் பொது மொழியை மக்களுக்கு சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழகத்தில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட மது ஆலைகளை வைத்துக்கொண்டு மது ஒழிப்பு குறித்து திமுக பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை எனவும்
இன்னும் 10 நாட்களில் கொரோனாவை முழுமையாக ஒழிக்க அரசு நடவடிக்கைகள்  மேற்கொண்டு வருவதாகவும்
கேரளா போன்று பிற மாநிலங்களைப் போல் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியினருடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
 ஆவடி தொகுதிக்கு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது பேசிய  தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் மது ஒழிப்புக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தியதற்கு தமிழகத்தில் இயங்கும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மது ஆலைகளை வைத்துக்கொண்டு போராட்டம் நடத்துவது பொதுமக்களை ஏமாற்றும் செயல் எனவும் கேரளா போன்று பிற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியினருடன் இணைந்து மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும் எனவும் இன்னும் 10 நாட்களில் கொரோனா நோயை ஒழிக்க அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


 செய்தியாளர்: சொக்கலிங்கம் AJ விக்டர்   D. மணிகண்டன்
 ஒளிப்பதிவாளர் :குபேரன் மற்றும் கணபதி
©All Rights NEW STAR TREND Private Limited

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited