திருநின்றவூர் பாக்கம் கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றம் நிவாரணம்

 ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் 500 குடும்பத்துக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசு விதித்துள்ள ஊரடங்கு காரணத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமலும் வேலையின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆவடி அடுத்த திருநின்றவூர் பாக்கம் கிராம பகுதியை சார்ந்த  500 க்கும் மேற்பட்டோருக்கு ரஜினி மக்கள் மன்றம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர்  சுந்தரமூர்த்தி அறிவுறுத்தலின் படி திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சந்திரகுமார் ஏற்பாட்டில் திருவள்ளூர் மாவட்ட ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அவர்கள்  முன்னிலையில்   வீடு வீடாக  கபசுரக் குடிநீர்  மற்றும் அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய்,உளுந்து,புளி பூண்டு,மிளகு சீரகம் குழந்தைகளுக்கு பிஸ்கட் பால் பாக்கெட் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துமாவு மற்றும் காய்கறிகளை வழங்கினார் இந்த நிகழ்வில்  திருவள்ளூர் மாவட்ட  வர்த்தகர் அணி செயலாளர் இ ஆர் சரவணன்  ரமேஷ்பாபு மகளிர் அணி செயலாளர் எம் கலா முனுசாமி மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் பாக்கம் ஊராட்சி வி.ஸ்டாலின் பழனி பி ராஜ் ரஜினி ஆர் பொண்ணு வேல்  நாகராஜ் மற்றும் ராஜ் பயன் அடைந்த பொதுமக்கள் சமூக விலகலை குடைபிடித்து வாங்கிச் சென்றனர்
  செய்தியாளர் : ஆவடி ராஜன்
    பட்டாபிராம் சென்னை
©All Rights NEW STAR TREND Private Limited 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited