ஹாட்ஸ்பாட் இல்லாத பகுதிகளில் லாக்டவுன் தளர்வு.. இந்த லிஸ்டில் உங்க ஏரியா இருக்கிறதா.. அறிவது எப்படி?

சென்னை: கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் தளர்வு கொடுக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
இதனால், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமின்றி, ஓரளவுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரம், நீங்கள் வசிக்கக்கூடிய பகுதி ஹாட்ஸ்பாட்தானா அல்லது சாதாரண பகுதியா என்பதை எப்படி கண்டறிவது?
கெடுபிடி
 ஹாட்ஸ்பாட் என்று கூறக்கூடிய பகுதிகளில், இப்போது இருப்பதை விடவும் கெடுபிடிகள் அதிகரிக்கும். ஆனால், மற்ற பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பும். ஹாட்ஸ்பாட் என்று எதைக் கூறுகிறோம் என்றால், ஒரு குறிப்பிட்ட பகுதியில் 6 பேர் அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்த பகுதி ஹாட்ஸ்பாட் என்று அழைக்கப்படுகிறது. அதை சுற்றிலும் சுமார் மூன்று கிலோமீட்டர் பகுதிக்கு கண்டைன்மெண்ட் பகுதி என்று அழைக்கப்பட்டு அவை முழுக்க சுகாதார துறையின் கட்டுப்பாட்டுக்கு கீழே சென்று விடும்.

கிருமிநாசினி தெளிப்பு 
ஹாட்ஸ்பாட் என்றழைக்கப்படும் கூடிய பகுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள், கிருமிநாசினி தெளிப்பு போன்ற பணிகள் இருக்கும் என்ற போதிலும் கூட, மக்கள் நடந்து சென்று, ஒவ்வொருவராக அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். ஹாட்ஸ்பாட் என்று அழைக்க கூடிய பகுதியில், எந்த நேரம் வேண்டுமானாலும் சமூக பரவல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், அப்படியான நிலை ஏற்பட்டவுடன் அந்த பகுதி சீல் செய்யப்படும் வாய்ப்பு அதிகமாகிறது. ஆனால் ஹாட்ஸ்பாட் பகுதி அனைத்துமே சீல் வைக்கப்படுவதில்லை. குணப்படுத்திவிடலாம் என அதிகாரிகள் கருதினால் சீல் தேவையில்லை.
டோர் டெலிவரி 
சீல் வைக்கப்படும் பகுதிகளில், உரிய பயிற்சி பெற்ற பணியாளர்களுடன் ஆம்புலன்ஸ்கள் அவசர தேவைகளுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. வீடுகளுக்கே காய்கறி உள்ளிட்டவை சப்ளை செய்யப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் அதிகாரிகள் சென்று மக்களிடம் நோய் அறிகுறி இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வார்கள், அல்லது கேள்வி கேட்டு தகவல் தெரிந்து கொள்வார்கள்.

அரசு புள்ளி விவரம் 
சீல் செய்யப்பட்ட ஏரியாக்களுக்கு உள்ளே, மீடியாக்கள் கூட செல்ல முடியாது. உங்கள் பகுதி ஹாட்ஸ்பாட் பகுதிதான் என்பதை அறிந்துகொள்ள மேலே நாம் குறிப்பிட்ட ஒரே ஏரியாவில் 6 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களை கவனித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். இதில் ஏரியா என்பது சில ஊர்களில் வார்டு என்பதை குறிக்கும், சில நகரங்களில் சட்டசபை தொகுதியை குறிக்கும். ஹாட்ஸ்பாட் என்ன என்பதை அரசே அறிவிக்கும். பெங்களூரில் 38 ஹாட்ஸ்பாட் இருப்பதாக மாநகராட்சி நேற்று அறிவித்திருந்தது. அதுபோல உங்கள் ஊர் நிர்வாகங்களின் அறிவிப்புகளை கவனியுங்கள்.

© All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED


Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited