திருவள்ளூர் முதியவருக்கு கொரோனா


திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த, ௬௨ வயது முதியவருக்கு, கொரோனா பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது. இவர், கடந்த மாதம், டில்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் ஒருவர். இவருடன், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்டோரும், டில்லி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். அதனால், அவர்களையும் மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து, திருவள்ளூர் அடுத்த, குன்னவலம் தனியார் கல்லுாரியில் தனிமைப்படுத்தியுள்ளது.


அவர்களின் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டு, சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த முதியவரை, அதே கல்லுாரியில் தனி அறையில் வைத்து, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், வைரஸ் பாதித்த முதியவர், யார், யாரை சந்தித்துள்ளார் என்பதை கண்டறியும் பணியிலும், சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
                               © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited