திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு ரூ.8,000 கோடி இழப்புதிருப்பூர் : கொரோனாவால், 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான, உள்நாட்டு சந்தைக்கான கோடை கால ஆடை உற்பத்தியை, திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் இழந்துள்ளனர்.கொரோனாவால், ஏப்ரல், 14 வரை தடையுத்தரவு அமலில் உள்ளது. நடப்பு ஆண்டு, கோடை கால ஆடை உற்பத்தியை திருப்பூர், முழுமையாக இழக்கும் நிலை உருவாகியுள்ளது. 'லகுஉத்யோக் பாரதி' மாநில செயலர் மோகனசுந்தரம் கூறியதாவது:கொரோனாவால், கோடைக்கான உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. மே மாதம் வரை, கோடை கால ஆடை வர்த்தகம் நடப்பது வழக்கம். 14ம் தேதிக்கு பின், தடை உத்தரவு நீங்கினாலும் கூட, இயல்பு நிலை திரும்புவதற்கு, மூன்று மாதங்களுக்கு மேலாகி விடும்.

எனவே, இந்தாண்டு, 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோடை கால ஆடை உற்பத்தி, திருப்பூருக்கு பறிபோவதை தவிர்க்க முடியாது. சீசன் மாறினால், கோடைக்காக உற்பத்தி செய்த ஆடைகளை சந்தைப்படுத்த முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.
      © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED


Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited