திருமலை கோவிலில் ஸ்ரீராம நவமி ஆஸ்தானம்

திருப்பதி : ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, திருமலையில், உற்சவமூர்த்திகளுக்கு நேற்று ஆஸ்தானம் நடந்தது.திருமலையில், ஆண்டுதோறும், ஸ்ரீராமர் ஜென்ம தினத்தன்று, ஆஸ்தானம் நடத்தி வருகிறது தேவஸ்தானம்.அதன்படி, நேற்று ஸ்ரீராம நவமி உற்சவத்தை முன்னிட்டு, காலை ஏழுமலையான் கருவறையில் உள்ள, சீதா, லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமரை, கோவிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருள செய்து, அவர்களுக்கு, பால், தயிர், தேன், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

மாலை, 6:௦௦ முதல், 7:௦௦ மணி வரை ஏழுமலையான் கோவில் தங்க வாயில் அருகில், சீதா, லட்சுமண, ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமரை எழுந்தருள செய்து, அவர்களுக்கு ஆஸ்தானம் நடத்தப்பட்டது. 6 மணி நேர ஓய்வுதிருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவில் ஏற்படுத்தப்பட்ட கால கட்டத்தில் காலை, 5:00 மணிக்கு சுப்ரபாத சேவை துவங்கி, இரவு, 8:00 மணிக்கு ஏகாந்த சேவையுடன், தினசரி கைங்கரியங்கள் நிறைவு பெற்று வந்தன.அப்போது, பெருமாளுக்கு ஓய்வு என்பது பூரணமாக இருந்தது.

அதன்பின், பக்தர்கள் வருகை அதிகரிக்க துவங்கியதும், அவர்களின் தரிசனத்திற்காக, இரவு ஏகாந்த சேவை, 10:00 மணிக்கு மாற்றப்பட்டது. அதன்பின் ஏழுமலையான் ஓய்வு, நான்கு மணி நேரமாக குறைந்தது.திருமலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய துவங்கிய பின், நள்ளிரவு, 12:00 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தப்பட்டு, 12:30 மணிக்கு கோவில் நடை சாற்றப்பட்டது. மீண்டும் சுப்ரபாத சேவைக்காக, அதிகாலை, 2:30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு வருகிறது.

இதனால், ஏழுமலையான் ஓய்வு நேரம், வெறும் ஒன்றரை மணி நேரமாக குறைந்து விட்டது. இந்நிலையில், தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழுமலையானுக்கு, வழக்கமான பூஜைகள் தவிர்த்து, தினமும் ஆறு மணி நேரம் ஓய்வு கிடைத்து வருகிறது.ஏப். 14ம் தேதி வரை, ஏழுமலையானுக்கு இந்த ஓய்வு நிரந்தரமாக கிடைக்கும்.
             © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited