'டாஸ்மாக்'கில் இருந்து மது எடுத்த ஊழியர் கைது




நாமக்கல் : டாஸ்மாக் கடையிலிருந்து, நள்ளிரவில் மது பாட்டில்களை விற்பனைக்கு எடுத்துச் சென்ற, பார் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.


தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால், டாஸ்மாக் கடை, பார்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், ஒரு டாஸ்மாக் கடையில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, மது பாட்டில்களை சிலர் எடுத்துச் செல்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார், டூ - வீலரில் மது பாட்டில்கள் அடங்கிய பெட்டியுடன் சென்ற ஒருவரை சுற்றிவளைத்தனர். விசாரணையில், நாமக்கல், நல்லிபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், 23, என்பதும், அதே கடை பாரில், பணியாற்றி வருவதும் தெரிந்தது.கடை விற்பனையாளர், முருகேசன், பார் உரிமையாளர், வீராங்கனுக்கு, மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார்.

இதையடுத்து, வீராங்கன் ஊழியரை அனுப்பி, கடையை திறந்து, மதுவை எடுத்துச் சென்றது தெரிந்தது.ஸ்ரீதரை கைது செய்த போலீசார், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 864 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விற்பனையாளர், பார் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
      © All Copyrights NEW TREND MEDIA Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited