மொட்டைமாடிதான் இப்போ டிரெட் மில்.. சைலேந்திர பாபு ஐபிஎஸ் வெளியிட்ட சூப்பர் வீடியோ

சென்னை: கொரோனாவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ள நிலையில் யாரும் உடற்பயிற்சி செய்ய முடியாமல் உள்ளார்கள்.இந்நிலையில் மொட்டைமாடிதான் இப்போ டிரெட் மில் . இளம் வெயிலில் ஓடினால் விட்டமின்-D கிடைக்கும், அது நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சைலேந்திர பாபு ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு தொடங்கி 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகள் தவிர எதற்காகவும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் என்றாலும் அடிக்கடி வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். தினசரி காலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள். தினசரி ஜிம்முக்கு (உடற்பயிற்சி கூடம்) போய் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களும் உடற்பயிற்சிகள் எதுவும் மேற்கொள்ள முடியாமல் வீட்டுக்குள்ளேயே கிடக்கிறார்கள். இதில் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், முதியவர்கள், பெண்கள் என பலரும் தங்கள் உடல் நலத்தை பாதுக்காக்க கொஞ்சநேரமாது நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம் இப்போதைய சூழலில் உடற்பயிற்சியை மொட்டை மாடியிலேயே மேற்கொள்ளலாம் என்று காவல்துறை கூடுதல் டிஜிபி சைலேந்திபாபு ஐபிஎஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர், மொட்டைமாடிதான் இப்போ டிரெட் மில் . இளம் வெயிலில் ஓடினால் விட்டமின்-D கிடைக்கும், அது நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கும். ஆரம்பத்தில் 10 நிமிடம் ஓடுஙகள், அடுத்து 30 நிமிடம் ஓடுங்கள், அடுத்த ஒரு மணி நேரம் கூட ஓடலாம். நாளை முதல் உடலை பிட்டாக வைத்துக்கொள்ள மொட்டை மாடியில் முயற்சி செய்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.
     © All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited