'சீல்' வைத்த பகுதிகளில் நடமாடும் ரேஷன் கடை


ஊட்டி, : ஊட்டி, குன்னுார், கோத்தகிரியில், 'சீல்' வைக்கப்பட்ட பகுதிகளில், நடமாடும் ரேஷன் கடைகள் மூலம், கொரோனா நிவாரண தொகை மற்றும் இலவச பொருட்கள் வழங்கப்பட்டன.



நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி பகுதிகளைச் சேர்ந்த எட்டு பேர், ஊட்டி அரசு மருத்துவமனை தனி வார்டில், கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.இதை தொடர்ந்து, ஊட்டி காந்தள், குன்னுார் ரேலி காம்பவுண்ட், கோத்தகிரி லோயர் பஜார் பகுதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'சீல்'வைக்கப்பட்டு, மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் வழங்க, நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''சீல் வைக்கப்பட்ட இடங்களில், நடமாடும் மருத்துவமனை; ரேஷன் கடைகள் மூலம், மக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ''அத்தியாவசிய பொருட்கள் வேண்டுவோர், அரசு அதிகாரியால் அமைக்கப்பட்ட தன்னார்வ குழுவினரை தொடர்பு கொண்டால், வீடுகளுக்கு கொண்டு வந்து தருவர்,'' என்றார்.
         © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited