தனிமைப்படுத்தப்பட்ட வங்கி கிளை மற்றும் ஏ.டி.எம்., மையம்


ப.வேலுார் : ப.வேலுாரில், எஸ்.பி.ஐ., வங்கி கிளை மற்றும் ஏ.டி.எம்., மையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் தாலுகாவில், மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடக்கின்றன. இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர்களில் ஒருவர், ப.வேலுார் ஸ்டேட் வங்கிக்கு, கடந்த, 27ம் தேதி சென்றதாக கூறப்படுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், வங்கி கிளை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, வங்கியின் முன், நேற்று காலை அறிவிப்பு ஒட்டப்பட்டு, கிளை மற்றும் ஏ.டி.எம்., மையம் மூடப்பட்டது.

இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள், பரிவர்த்தனைகளை தொடர, மோகனுார் மற்றும் திருச்செங்கோட்டில் உள்ள கிளைகளை தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டது. அருகில் இயங்கி வந்த, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி கிளைகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
         © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited