மருத்துவ பொருட்கள், 'சப்ளை' களம் இறங்கியது தபால் துறைதிருப்பூர் : கொரோனா தாக்கம் அதிகம் உள்ள டில்லி, மும்பை, கேரளா பகுதிகளுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ கருவிகளை, 'டெலிவரி' செய்யும் பொறுப்பை, தபால் துறை ஏற்றுள்ளது.கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், கருவிகள், மருந்துகள், முக கவசங்களுக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது.இவற்றை, பிற மாவட்டம், மாநிலங்களில் இருந்து பெற்று, டெலிவரி செய்யும் சேவையில், மத்திய தபால் துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக, சரக்கு விமான சேவை மற்றும் மெயில் மோட்டார் நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு தெற்கு மண்டல, ரயில்வே மெயில் சர்வீஸ் கண்காணிப்பாளர் கோபிநாதன் கூறியதாவது:கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் விரைவு பார்சல் சேவை மூலம் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு தேவையான மருந்துவ உபகரணங்கள், முக கவசங்கள் முன்பதிவு செய்யப்பட்டு, டெலிவரியாகின்றன. இந்த விரைவு தபால் பார்சல்களை, தரை வழியாக, உரிய பகுதிகளுக்கு கொண்டு சேர்க்க, நடவடிக்கை எடுத்துள்ளோம். சென்னையில் இருந்து சரக்கு விமான சேவை மூலம், பெங்களூரு, மும்பை, டில்லி, புனே உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தன்னார்வலர்களும் தபால் துறையின் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
                     © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED
   

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited