ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.1,000 பயன் தந்த கிராம சிறுசேமிப்பு

கோத்தகிரி : கோத்தகிரி அருகே, ஊர் சேமிப்பு நிதியில் இருந்து, ஒவ்வொரு வீட்டுக்கும், தலா, 1,000 ரூபாய் கொரோனா நிதி உதவி வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டம், கக்குச்சி ஊராட்சி, ஒன்னதலை கிராமத்தில், 180க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கிராம மக்களின் அத்தியாவசிய தேவைக்காக சிறு சேமிப்பு நிதி உள்ளது.கோவில் விழா, இறுதி சடங்கு, கிராம மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தேவைக்கு, இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.தற்போது, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நோய் தொற்றை தடுக்க, ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.

உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதில், சிக்கல் உள்ளது. இந்நிலையில், மாநில அரசு வழங்கும், 1,000 ரூபாயுடன், கிராம சேமிப்பு நிதியில் இருந்து, ஒவ்வொரு வீட்டிற்கும், 1,000 ரூபாய் வழங்க, ஊர் மக்கள் ஒருங்கிணைந்து முடிவெடுத்தனர்.இதன்படி, ஒவ்வொரு வீட்டுக்கும், கொரோனா நிதி உதவியாக, தலா, 1,000 ரூபாய் நேற்று வழங்கப்பட்டன. இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
         © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited