ரேஷனில் இன்றும் நிவாரணம் உண்டு
சென்னை : ரேஷன் கடைகள், இன்று வழக்கம் போல் செயல்பட உள்ளதால், கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண பொருட்களை வாங்கலாம்.


தமிழகத்தில், ரேஷன் கடைகளுக்கு, மாதத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை. அதற்கு மாற்றாக, அவை, அந்த வார ஞாயிற்றுகிழமைகளில் செயல்படும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கொரோனா வைரஸ் தடுப்பு கால நிவாரணமாக, ரேஷன் கடைகளில், 1,000 ரூபாயும், இலவச ரேஷன் பொருட்களும், நேற்று முதல் வழங்கப்படுகின்றன.இதனால், இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக இருந்தாலும், அவை, வழக்கம் போல் செயல்படும் என, உணவு துறை ஏற்கனவே அறிவித்தது. எனவே, கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளுக்கு சென்று, நிவாரண பொருட்களை வாங்கலாம்.
          © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited