அங்கன்வாடி பணியாளர்கள் அலட்சியம்

ஓமலுார் : உணவு பொருட்களை பெற, குழந்தைகளுடன் பெற்றோரை, அங்கன்வாடி மையத்துக்கு வரவழைத்தது, பணியாளர்களின் அலட்சியத்தையே காட்டுகிறது.

'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, அங்கன்வாடி மையங்களை மூட அரசு உத்தரவிட்டு, குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்களை, அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்க, அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, கே.மோரூர் தொடக்கப்பள்ளி வளாகத்திலுள்ள, அங்கன்வாடி மையத்துக்கு, நேற்று குழந்தைகளுடன் பெற்றோர் வந்து, உணவு பொருட்களை பெற்றனர்.


இதுகுறித்து, பெற்றோர் கூறுகையில், 'உணவு பொருள் பெற, மையத்துக்கு குழந்தைகளோடு வர, அங்கன்வாடி பணியாளர்கள் அறிவுறுத்தியதால் வந்தோம்' என்றனர்.கொரோனா பரவலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அங்கன்வாடி பணியாளர்கள் அலட்சியமாக செயல்பட்டது, வெட்டவெளிச்சமாகியுள்ளது. இது குறித்து, காடையாம்பட்டி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், அருள்மொழி கூறுகையில், ''சம்பவம் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
               © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited