நிறைமாத கர்ப்பிணி.. வயிற்றில் தீவைத்து எரித்த கொடூர புஷ்பவல்லி.. தஞ்சையில் ஷாக்!

தஞ்சை: நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் மாமியார் புஷ்பவல்லி தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பொட்வாச்சாவடி பகுதியை சேர்ந்தவர் புஷ்பவல்லி.. இவரது மருமகள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு வரும் என தெரிகிறது.. அதுபோலவே இன்றும் மாமியார் - மருமகள் இடையே சண்டை வந்துள்ளது.. இதில் ஒரு கட்டத்தில் ஆவேசமான மாமியார் புஷ்பவல்லி, மருமகளின் வயிற்றிலேயே தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வலியால் கர்ப்பிணி பெண் அலறி துடிக்க, அவரை பலத்த தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. உடனடியாக பெண்ணுக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.. வயிற்றில் தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குழந்தையும் ஐசியூவில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மாமியார் புஷ்பவல்லியை போலீசார் கைது செய்தனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு பிறகுதான் இவர்களுக்குள் எதனால் சண்டை வந்தது என்பதும், புஷ்பவல்லி கோபத்துக்கு காரணமும் தெரியவரும். எனினும் நிறைமாத கர்ப்பிணி மருமகள் வயிற்றில் மாமியார் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் தஞ்சாவூரில் ஏற்படுத்தியுள்ளது.

    © All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited