என்ன உதவி தேவைப்பட்டாலும் என்னை தொடர்புகொள்ளுங்கள்... நிர்வாகிகளுக்கு ஊக்கம் கொடுத்த ஸ்டாலின்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் 200 திமுக நிர்வாகிகளுடன் இன்று கலந்துரையாடி கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகள் பற்றி கேட்டறிந்தார். அப்போது, யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் தனது அலுவலகத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம் என நிர்வாகிகளிடம் தெரிவித்தார் ஸ்டாலின். மேலும், ''ஒன்றிணைவோம் வா'' என்ற புதிய முழக்கத்தை முன்வைத்து அதற்கான தனி இணையதளத்தை விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் ஸ்டாலின்.தொடர் பணிகள்
 கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பெரும்பாலான விஐபிக்கள் வீட்டில் ஓய்வில் இருந்து வருகின்றனர். ஆனால் அதற்கு விதிவிலக்காக வீட்டில் இருந்தாலும் தொடர்ந்து நிர்வாகிகளுடன் காணொலி சந்திப்பு, ஆலோசனைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் என எப்போதும் தன்னை பரபரப்பாக வைத்திருக்கிறார் ஸ்டாலின். அந்த வகையில் இன்று மட்டும் எம்.எல்.ஏ.க்கள்., எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் என 200 பேருடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார் ஸ்டாலின்.


ஊக்கம் தந்த பேச்சு
 ஸ்டாலினுடன் இணைவோம், உதவி எண், நல்லோர் கூடம், ஏழைகளுக்கு உணவு, வட்டார குழுக்கள் உருவாக்கம் ஆகிய ஐந்து முயற்சிகளுக்கான தொகுப்பு பற்றி நிர்வாகிகளிடம் ஸ்டாலின் விரிவாக எடுத்துரைத்தார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணிகளில் திமுகவினர் முழுவீச்சில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தானும் இன்னும் 2 மாதங்களுக்கு இந்த பணிகளில் உங்களுடன் சேர்ந்துகொள்கிறேன் எனவும் நிர்வாகிகளிடம் தெரிவித்தார் ஸ்டாலின்.


என்னை அழையுங்கள்
 கொரோனா நிவாரணம் விவகாரத்தில் யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் தயக்கமின்றி தன்னை தொடர்புகொண்டு எந்நேரமும் பேசலாம் என்று நிர்வாகிகளுக்கு ஊக்கம் தந்தார் ஸ்டாலின். மேலும், திமுகவினர் தங்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் ஸ்டாலின் விடுத்தார்.உதவி எண் 
''ஒன்றிணைவோம் வா'' என்ற பெயரில் புதிய இணையதளத்தை தொடங்கி வைக்க உள்ள ஸ்டாலின், உதவி தேவைப்படுவோர் எளிதாக தொடர்பு கொண்டு தகவல் அளிக்கும் வகையில் 9073090730 என்ற உதவி எண்ணையும் வெளியிட்டுள்ளார். மேலும், கட்சிக்கு அப்பாற்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்களை ஒரே குழுவாக ஒன்றிணைத்து மக்களுக்கு உதவவேண்டும் என நிர்வாகிகளிடம் தெரிவித்தார் ஸ்டாலின்.

 செய்தியாளர்: அமர்நாத்.R
    பட்டாபிராம்,  சென்னை
©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED ReservedPost a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited