போக்குவரத்து ஊழியர்கள் ரூ.14 கோடி நிதியுதவி ; அமைச்சர் விஜயபாஸ்கர்


கரூர் : ''போக்குவரத்துத் துறை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியமான, 14.10 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.


கரூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 43 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 34 பேரின் ரத்த மாதிரிகள், பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் ரத்த மாதிரி, இன்று அனுப்பப்பட உள்ளது.டில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் வசித்த பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று தடுப்பு பணியில், மாவட்டத்தில், 6,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா சிறப்பு வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு, 6,000 பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. போக்குவரத்துத் துறை பணியாளர்களின் ஒரு நாள் ஊதியமான, 14 கோடியே, 10 லட்சத்து, 75 ஆயிரத்து, 938 ரூபாய், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
           © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited