அறுவடை செய்யாமல் அழுகும் பலா பழங்கள்

புதுக்கோட்டை : ஊரடங்கு காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் அறுவடை செய்ய முடியாமல், மரங்களிலேயே பலாப் பழங்கள் பழுத்து அழுகுகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, கொத்தமங்கலம் உட்பட பல கிராமங்களில், தோட்டங்களிலும், வீடுகளிலும் பலா மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கு விளையும் பலாப்பழங்கள், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும், ஒரு நாளைக்கு, 200 டன் வரை அனுப்பப்படுகிறது. கஜா புயலில், ஏரளமான பலா மரங்கள் அடியோடு சாய்ந்து, விவசாயிகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியது. எஞ்சியிருந்த மரங்களில், இந்த ஆண்டு ஓரளவு காய்கள் பிடித்து, அறுவடைக்கு தயாராக இருந்தன.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், பலாப் பழங்களை பறித்து விற்பனை செய்ய முடியாமல், மரங்களிலேயே பழுத்து அழுகிக் கொண்டிருக்கின்றன.

'ஊரடங்கால், பலாப்பழ விற்பனை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. பலா விவசாயிகளுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
      © All Copyrights NEW TREND MEDIA Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited