ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் வேகமாக குறையும் கொரோனா பாதிப்பு.. காரணம் என்னவாக இருக்கும்?

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதற்கு காரணம் பரிசோதனை நடைமுறையில் செய்த மாற்றமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதாவது உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி சோதனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட வந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. மாறாக குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நேற்றைய நிலவரத்தை எடுத்துக் கொண்டோமேயானால் நேற்று மட்டும் தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துவிட்டது.


முதல்வர் தகவல்
 ஆனால் நேற்று ஒரே நாளில் குணமடைந்து வீடுதிரும்பியோர் 82 பேர் ஆவர். இப்படித்தான் கடந்த 2 அல்லது 3 நாட்களாக மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பதிலளித்தார். அப்போது அவர் இன்னும் 4 அல்லது 5 நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும் என நம்பிக்கை வார்த்தையை கூறினார்.

பாதிப்பு
 இந்த நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. இதன் மூலம் கொரோனா அறிகுறி இருக்கிறதா என்பது தெரியவரும். இது ஆரம்பக்கட்ட பரிசோதனைதான். எனினும் கொரோனா பாதிப்பை உறுதி செய்வது பிசிஆர் சோதனைதான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பிசிஆர் சோதனையின் முடிவுகள் வருவதற்கு நாள்கணக்காகிறதால் கொரோனா பாதிப்பு அதற்குள் பல்கி பெருகுகிறது.

கொரோனா பரிசோதனை 
இதனால்தான் ரேபிட் டெஸ்ட் சோதனை நடத்தப்படுகிறது. தற்போது பாதிப்புகள் குறைந்து வருவதற்கு காரணம் கான்டாக்ட் டிரேசிங் முறையில் தமிழகம் அசத்தியது ஒரு காரணமாக இருந்தாலும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி சோதனை நடத்துவதும் ஆகும். ஆம். கடும் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் ஆகியவை இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

பரிசோதனை
 ஆனால் WHO, மேற்கண்ட 4 அறிகுறிகளில் ஏதேனும் இரண்டு இருந்தாலே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அதிலும் லேசான காய்ச்சல் இருந்தாலும் பரிசோதனையை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தியது. அதன்படி தற்போது தமிழகத்தில் லேசான சளி, காய்ச்சல் இருந்தாலே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

தமிழகம்
 அனைவருக்கும் வேகமாக பரிசோதனை செய்வதாலேயே பாதிப்புகள் குறைகிறது. WHO வழிகாட்டுதலின்படி கேரளாவும் தனது பரிசோதனை நடைமுறைகளை மாற்றிக் கொண்டதால் அங்கு பாதிப்புகள் குறைந்து காணப்படுபகின்றன. எனவே இன்னும் சில நாட்களில் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


  ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved 
Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited