ஒரே நாளில் முன்னேற்றம்.. 5363 பேருக்கு டெஸ்ட்.. கொரோனா ரேபிட் கிட் வந்ததும் வேகம் காட்டும் தமிழகம்!சென்னை: தமிழகத்தில் கொரோனா சோதனை வேகம் எடுத்துள்ளது. இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா ரேபிட் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,372 ஆக.உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவில் இருந்து தமிழகத்தில் இன்று மட்டும் 82 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் 365 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சோதனை மையங்கள் 3 புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

சீனாவிடம் ஆர்டர்

தமிழக அரசு சீனாவில் இருந்து கொரோனா ரேபிட் டெஸ்ட் கருவிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று ஏப்ரல் 2ம் தேதி அன்று மத்திய அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு மறுநாளே தமிழக அரசு ரேபிட் டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் ஆர்டர் செய்தது. தமிழகம் 5 லட்சம் கிட்ஸ் ஆர்டர் செய்தது. மத்திய அரசு 15 லட்சம் கிட்ஸ் ஆர்டர் செய்தது. இதில் இந்தியாவிற்கு 3 லட்சம் கிட்ஸ் வந்துள்ளது.

இன்றே சோதனை நடந்தது

அதில் தமிழகம் வர வேண்டிய 24 ஆயிரம் கிட்ஸ் அடக்கம் ஆகும். இந்த 24 ஆயிரம் கிட்ஸ் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இது போக 12 ஆயிரம் கிட்ஸ் மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்தது. இதன் மூலம் தமிழகத்திற்கு மொத்தம் 36 ஆயிரம் கிட்ஸ் கிடைத்தது. இன்றே இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை வைத்து சோதனைகள் செய்யப்பட்டது.

தமிழகத்தில் அதிகம்

இன்றே சேலம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் ரேபிட் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா டெஸ்ட் வேகம் தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5363 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் கொரோனா டெஸ்ட் மையங்கள் உள்ளது. 31 இடங்களில் தமிழகத்தில் கொரோனா டெஸ்ட் மையங்கள் உள்ளது.

தமிழகம் செம வேகம்

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35036 கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று முறை கொரோனா சோதனை செய்யப்பட்டவர்கள் போக, 29996 பேருக்கு தமிழகத்தில் மொத்தமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் 2 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா டெஸ்ட் செய்யப்படுகிறது. கடந்த 14ம் தேதி 6500 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது.

மொத்தமாக எவ்வளவு

அதன்பின் 15ம் தேதி 2091 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. 16ம் தேதி 2700 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. 17ம் தேதி 2508 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் 5363 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் கொரோனா சோதனையில் தற்போது மற்ற மாநிலங்களை விட வேகமாக செயல்பட தொடங்கி உள்ளது.
  ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited