12 மருத்துவர்கள்.. 5 மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா.. சாப்பாடு கூட இல்லை.. ஹீரோக்களை கைவிடும் தமிழகம்

சென்னை; தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிராக தீவிரமாக போராடிக்கொண்டு இருக்கும் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஏன் இன்னும் சில மருத்துவமனைகளில் போதிய அளவில் அடிப்படை வசதிகள் கூட மருத்துவர்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை. எங்களுக்கு போதிய அளவில் உணவு இல்லை. மருத்துவமனை மெஸ்ஸில் எங்களுக்கு உணவு கிடைப்பது இல்லை. அங்கு மெஸ்ஸை மூடி விட்டார்கள். இப்போது மருத்துவமனையின் மெஸ்ஸில் தண்ணீர் கூட கிடப்பது இல்லை.. ப்ளீஸ் உதவுங்கள். இது கோவையில் பிரபல மருத்துவமனை ஒன்றில் ஊழியர்கள், மருத்துவர்கள் கல்லூரியின் தலைவர் டீனுக்கு எழுதிய கடிதம் ஆகும். இந்த புகார் கடிதம் இணையம் முழுக்க கசிந்து பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுக்க தற்போது இதேதான் நிலைமை. ஆம் தமிழகம் முழுக்க மருத்துவர்கள் அடிப்படை வசதி இன்றி தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.பாதுகாப்பு உடைகள் இல்லை
 தமிழகத்தில் தற்போது மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு உடைகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதாவது மாஸ்க், கிளவுஸ், கண்ணாடிகள், உடலை பாதுகாக்கும் பிபிஇ (ppe) வகை உடைகள் ஆகியவை பெரிய அளவில் தட்டுப்பாடாக உள்ளது. பலரும் பயன்படுத்திய கிளவுஸ்களை கிருமிநாசினி கொண்டுகழுவி மீண்டும் பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டு உள்ளது. எந்த மருத்துவமனைக்கும் போதிய அளவிற்கு பாதுகாப்பான உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படவில்லை.பரபர உண்மை
 இது வெறும் புகார் கிடையாது. இந்த புகார் எந்த அளவிற்கு தீவிரமானது என்பதை இந்த புள்ளி விவரங்களை பார்த்தாலே தெரியும். தமிழகத்தில் இதுவரை 1173 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 12 மருத்துவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 3 மருத்துவர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. இது போக 5 மருத்துவ ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் தமிழக அரசு மருத்துவர்கள்.


அதிர்ச்சி பின்னணி 
ஆனால் இது மட்டுமில்லை நேற்று இன்னொரு மோசமான சம்பவமும் நடந்தது. நேற்று சென்னையில் கொரோனா அறிகுறியோடு சிகிச்சைபெற்று வந்த மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 60 வயது மருத்துவர் இவர். நேற்று சென்னையில் பலியான இவரின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் இவரின் உடலை தகனம் செய்ய சென்ற போது அங்கிருந்த மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


மிக மோசமான நிலை 
அச்சம் காரணமாக மக்கள் இவரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் உடலை புதைக்காமல் கடைசியில் மருத்துவர்கள், அந்த மருத்துவரின் உடலை மீண்டும் மருத்துவமனைக்கே கொண்டு வந்துள்ளனர். இவருக்கு கொரோனா இருப்பதே இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இவருக்கு இன்னும் கொரோனா டெஸ்ட் முடிவே வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதான் தமிழக அரசின் தற்போதைய வேகம்..மருத்துவர்கள் மீதான அக்கறை!


அதிக நேரம் பணி புரிகிறார்கள் 
நிலைமை இப்படி இருக்க மருத்துவர்கள் வேலை பார்க்கும் நேரம் 12 மணி நேரத்தை தாண்டி செல்கிறது. அதிக நோயாளிகள் உள்ள மருத்துவமனையில் சில மருத்துவர்கள் 18 மணி நேரம் கூட விடாமல் வேலை செய்கிறார்கள். இதில் 12 மணி நேரம் பலர் உணவு இடைவேளை கூட எடுக்காமல் வேலை செய்து வருகிறார்கள். சில மருத்துவமனைகளில் உணவு இடைவேளை கிடைத்தாலும் கூட, சாப்பிட சாப்பாடு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது .

மருத்துவர்கள் தனியாக இருக்கிறார்கள்
 கொரோனா காரணமாக இந்த மருத்துவர்கள் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி இவர்கள் மருத்துவமனையிலேயே இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் அதிகமான நோயாளிகள், தொடர் பணிகள் காரணமாக இவர்களுக்கு மன அழுத்தம், ரத்த கொதிப்பு ஆகியவை கூட ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்படி வேலை பார்க்கும் அரசு மருத்துவர்களுக்கு போதிய சம்பளம் இல்லை.மீண்டும் அரசு பயன்படுத்த முடியாது
 ஆம் இவர்களுக்கு போதிய சம்பளம் வழங்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஒரே பாதுகாப்பு உடையை ஒரு நாள் முழுக்க பயன்படுத்துகிறார்கள். ஒரு பாதுகாப்பு உடையை 5 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தினால் ஆபத்து என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு நாள் முழுக்க ஒரே பாதுகாப்பு உடையை பயன்படுத்துகிறார்கள். இதுதான் நிலை . கேரளாவில் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை உடை மாற்றுகிறார்கள்.

இரண்டு அரசும் எதுவும் சொல்லவில்லை

 கடந்த ஜனதா ஊரடங்கின் போது பிரதமர் மோடி மருத்துவர்களை பாராட்டும் வகையில் கைதட்ட சொன்னார். ஆனால் அவர் இப்போதுவரை மருத்துவர்களுக்கு என்று திட்டங்களோ, அறிவிப்பையோ வெளியிடவில்லை. மருத்துவ தலைநகர் என்று அழைக்கப்படும் சென்னையிலும் இதேதான் நிலை. தமிழக அரசு இவர்களுக்கு என்று எந்த விதமான அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை.. ஹீரோக்களை பார்த்து கைதட்டினால் மட்டும் போதாது அவர்களை பாதுகாப்பதுதான் அவசியம் என்பதை உணர வேண்டும்!


© All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited