வேகம் எடுக்கிறது.. தமிழகத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 1477 ஆக உயர்வு.. அதிர்ச்சி!

சென்னை: இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. முக்கியமாக தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்படும் நபர்களை விட தினமும் டிஸ்சார்ஜ் ஆகும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
ஆனால் நான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. ராபிட் கிட் சோதனை கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா வந்துள்ளது.

மொத்தம் எத்தனை

இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரிப்பு. சென்னையில் மட்டும் 50 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.

வேறு எங்கே

தஞ்சாவூரில் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. தஞ்சாவூரில் 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமாக 46 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கோவையில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 133 பேருக்கு கோவையில் கொரோனா ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் அங்கு 74 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி நிலை

திருநெல்வேலியில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 62 பேருக்கு கொரோனா உள்ளது. செங்கல்பட்டில் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 53 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரையில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 46 பேருக்கு கொரோனா உள்ளது. விழுப்புரத்தில் 7 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 33 பேருக்கு கொரோனா உள்ளது.
நாகப்பட்டினத்தில் நிலை 
நாகப்பட்டினத்தில் 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. மொத்தம் அங்கு 43 பேருக்கு கொரோனா உள்ளது. கடலூரில் 6 பேருக்கு கொரோனா இன்று ஏற்பட்டது. மொத்தம் 26 பேருக்கு அங்கு கொரோனா உள்ளது. திருவாரூரில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் அங்கு 26 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.தென்காசியில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தம் 22 பேருக்கு அங்கு கொரோனா உள்ளது.
பலி இல்லை 
விருதுநகரில் 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 19 பேருக்கு கொரோனா உள்ளது. காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு இன்று கொரோனா ஏற்பட்டது. அங்கு மொத்தம் 9 பேருக்கு கொரோனா உள்ளது. இன்று மட்டும் 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் யாரும் கொரோனா காரணமாக பலியாகவில்லை.

   செய்தியாளர் :அமர்நாத் R
   பட்டாபிராம், சென்னை
 ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved   Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited