ஒரே நாளில் 50 பேர்.. சென்னையில் படுதீவிரம் எடுத்த கொரோனா.. 285 பேருக்கு பாதிப்பு.. என்ன நடந்தது?

சென்னை: சென்னையில் மட்டும் 50 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரிப்பு.
இன்று மட்டும் 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழகத்தில் 411 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் யாரும் கொரோனா காரணமாக பலியாகவில்லை.

ராயபுரத்தில் அதிகம்

சென்னையில் ராயபுரத்தில்தான் அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில்தான் சென்னையில் அதிகமாக 73 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இது நேற்றைய கணக்குதான். இன்று சென்னையில் பாதிக்கப்பட்ட 50 பேரில் எத்தனை பேர் ராயபுரத்தில் இருந்து பாதிக்கப்பட்டார்கள் என்று விவரம் வெளியாகவில்லை. ராயபுரத்தில் கேஸ்கள் வரும் நாட்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேறு அதிகமாக உள்ள இடங்கள்

ராயபுரத்திற்கு அடுத்தபடியாக திரு.வி.க நகரில் மொத்தம் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோடம்பாக்கம் மற்றும் தண்டையார்பேட்டையில் 26 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதேபோல் அண்ணா நகரில் 24 பேருக்கும், தேனப்பேட்டையில் 19 பேருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுதான் சென்னையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் ஆகும்.

அதிர்ச்சி செய்தி

ஆனால் இன்று இந்த பகுதிகளில் மேலும் பலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். இன்று சென்னையில் கொரோனா தாக்கிய 50 பேர் எந்த மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரத்தை இன்னும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிடவில்லை. சென்னையில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4 மருத்துவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் 3 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


மிக மோசமான நிலை

மிக மோசமான நிலை

அதேபோல் சென்னையில் இன்று 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு இதனால் சென்னையில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இப்படி கொரோனா தீவிரமாக பரவ காரணம் மோசமான ஊரடங்குதான் காரணம் என்கிறார்கள். கடந்த சில நாட்களாக சென்னையில் மக்கள் சரியாக ஊரடங்கை கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக சென்னையில் சரியாக காண்டாக்ட் டிரேசிங் செய்யப்படவில்லை என்றும் புகார் உள்ளது.


அறிகுறி இல்லை

அறிகுறி இல்லை

அதேபோல் சென்னையில் இன்று பாதிக்கப்பட்ட 50 பேரில் 22 பேருக்கு அறிகுறியே ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்படி அறிகுறி இல்லாமல் கொரோனா பரவுவது மிகவும் ஆபத்தானது ஆகும். அறிகுறி இல்லாமல் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்துவம், அதை கண்டுபிடிப்பதும் மிகவும் கடினம் ஆகும். இதுதான் சென்னையில் வேகமாக கொரோனா பரவ காரணம் என்று கூறுகிறார்கள்.
 செய்தியாளர் :அமர்நாத் R
   பட்டாபிராம், சென்னை
 ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved  

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited