கொரோனா.. நேற்று 62 பேர் குணமடைந்தனர்.. சேலத்தில் 7 பேர் டிஸ்சார்ஜ்.. முதல்வர் பழனிசாமி ஹேப்பி நியூஸ்

சேலம்: சேலத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்., சேலத்தில் கொரோனா பரவிய 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1267 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 180 பேர் குணப்படுத்தபட்டுள்ளனர். இதனால் மீதம் உள்ள 1,072 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா காரணமாக தமிழகம் முழுக்க 15 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி தனது சொந்த மாவட்டமான சேலம் சென்று அங்கு கொரோனா தடுப்பு பணிகளை கவனித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.


பேட்டி அளித்தார் 
முதல்வர் பழனிசாமி தனது பேட்டியில் விளைபொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது. ரேஷன் அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கிறோம். அதேபோல் வெளிமாநில ஊழியர்களுக்கு அரசு அறிவித்த உதவிகள் , அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் வழங்கப்படும். மேலும் அமைப்பு சாரா பணியாளர்களுக்கு அரசு அறிவித்த உதவிகள் எல்லாம் வழங்கப்படும்.

அம்மா உணவகம் எப்படி
 அம்மா உணவகம் மூலம் இன்று நாள் ஒன்றுக்கு சேலத்தில் 11 ஆயிரத்து 600 பேர் உணவு அருந்துகிறார்கள். சேலத்தில் மட்டும் 15 அம்மா உணவகம் செயல்படுகிறது. சேலத்தில் இதுவரை 2 லட்சம் பேர் உணவருந்தி உள்ளனர். சேலம் மளிகை கடைகள் மூலமாக டோர் டெலிவரி செய்து வருகிறோம். சேலத்தில் 23 ஆயிரம் பேருக்கு இதுவரை உணவுகளை டோர் டெலிவரி செய்து இருக்கிறோம்.சேலத்தில் கொரோனா பரவிய இடங்கள் 
சேலத்தில் கொரோனா பாதித்த 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சேலத்தில் கொரோனா பரவிய 9 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்திற்கு 24 ஆயிரம் ரேபிட் கிட்கள் வந்துள்ளது. இது நாம் ஆர்டர் செய்த ரேபிட் கிட்கள்.


மத்திய அரசு கிட்கள்
 மத்திய அரசு நமக்கு 12 ஆயிரம் ரேபிட் கிட்களை மட்டுமே தருகிறது. இப்போது வந்திருக்கும் இந்த கிட்கள் நாம் ஆர்டர் செய்தது ஆகும். இதற்கு முன் ஆர்டர் செய்த 4 லட்சம் கிட்கள் நமக்கு வரவில்லை. அது வராத காரணத்தால் தற்போது சீனா நமக்கு இதை அனுப்பி உள்ளது. இது நாம் கொடுத்த பணத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கும் கிட்கள். மத்திய அரசு தனியாக தரும் கிட்கள் வேறு. அவர்கள் 12 ஆயிரம் தருவதாக கூறினார்கள். நாம் 50 ஆயிரம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம்.தீவிரமாக நடந்து வருகிறது 
கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று மட்டும் 62 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தமாக 180 பேர் குணமடைந்துள்ளனர். தொடக்கத்திலேயே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபர்கள் குணமடைந்து வருகிறார்கள். கடைசி நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நபர்களைத்தான் காப்பாற்ற முடியவில்லை. அதனால் உங்களுக்கு அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனையில் சேருங்கள் என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

© All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited