நெருங்க கூட முடியவில்லை.. சென்னையில் 2 மண்டலத்தில் மட்டும் "நோ- கொரோனா".. எப்படி சாத்தியமானது?

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக சென்னை முழுக்கவும் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சென்னையில் இரண்டு பகுதிகள் மட்டும் எந்த விதமான பாதிப்பிற்கு உள்ளாக்கவில்லை. சென்னையில் இரண்டு மண்டலங்களில் மட்டும் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

டிவிட்டரில் கலக்கும் CM-நேரடியாக முதல்வருடன் பேசலாம்...உதவி கேட்கலாம்
 தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது . தமிழகத்தில் நேற்று மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோன பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 12 ஆகும்.


சென்னை நிலை என்ன
 தமிழகத்தில் சென்னையில் மட்டும் கொரோனா மிக தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டும் 216 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் மண்டல வாரியான விவரங்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் ராயபுரத்தில் 64 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.திருவொற்றியூர் பகுதியில் பேருக்கு 4 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதியில் 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

வேறு பகுதிகள் 
அடையாறு 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தேனாம்பேட்டையில் 16 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தண்டையார்ப்பேட்டையில் 20 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். திருவிக நகரில் 28 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெருங்குடியில் 7 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அண்ணாநகரில் 22 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாதவரத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சோழிங்கநல்லூர், ஆலந்தூரில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பாதிப்பு ஏற்படவில்லை 
ஆனால் சென்னையில் இரண்டு மண்டலங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையில் இருக்கும் மணலி மற்றும் அம்பத்தூர் மண்டலங்களில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை. இதில் மணலியில் மக்கள் தொகை ஏறத்தாழ 80 ஆயிரம் ஆகும். அதேபோல் அம்பத்தூரில் 6 லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த இரண்டு மண்டலத்திலும் கொரோனா ஏற்படவில்லை.

அம்பத்தூர் நிலை
இதில் அம்பத்தூர் கொஞ்சம் முக்கியமான இடம் ஆகும். கொரோனாவால் கோயம்பேடு பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கோயம்பேட்டிற்கு அருகிலேயே இருக்கும் அம்பத்தூர் கொரோனா காரணமாக பாதிப்படையவில்லை. அதிலும் அம்பத்தூர் மண்டலத்தில் முக்கியமான இடங்களான அம்பத்தூர், பாடி,கொரட்டூர், கள்ளிக்குப்பம்,அண்ணா நகர் மேற்கு விரிவு,முகப்பேர்,புதூர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகள் உள்ளது.


சென்னையில் பாதிக்காத மண்டலம்
 சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளது, இதில் 13 மண்டலங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அருகில் இருக்கும் மண்டலங்களில் எல்லாம் கொரோனா பாதிப்பு இருந்தும் கூட மணலி மற்றும் அம்பத்தூரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சென்னை மாநகராட்சிக்கு இந்த செய்தி ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் அளித்துள்ளது.

வீடு வீடாக சோதனை செய்தனர் 
இந்த அம்பத்தூர் மற்றும் மணலி பகுதிகளில் வீடு வீடாக கொரோனா அறிகுறி இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டது. ஆனால் அங்கு யாருக்கும் அறிகுறி இல்லை. இதனால் இந்த இரண்டு மண்டலங்களில் மட்டும் கொரோனா நுழையவில்லை. மிக கடுமையான கட்டுப்பாடும், இந்த மண்டல அதிகாரிகளின் தீவிரமான சோதனையும், மக்கள் நடமாட்டத்தை தடை செய்ததும்தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

தீவிரம் காட்டினார்கள்
 சென்னையில் கொரோனா வந்த போதே மக்கள் இங்கு முழு கவனம் செலுத்த தொடங்கி விட்டார்கள். தனிமனித விலகலை கடைபிடிக்க தொடங்கிவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. இங்கு போலீசாரும் தீவிரமான கண்காணிப்பில் இருந்தனர். இதனால்தான் அங்கு கொரோன நெருங்க கூட இல்லை என்று கூறப்படுகிறது. இந்த பகுதி மக்களை இந்த செய்தி ஆச்சர்யப்பட வைத்துள்ளது.


© All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited