இன்று ஒரே நாளில் மேலும் 49 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் இதுவரை பாதிப்பு 1372 பேர்... 15 பேர் பலி..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1323-ல் இருந்து 1372-ஆக இன்று உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 49 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.1% என்ற அளவில் தான் உள்ளது எனவும் நல்ல நிலையை நோக்கி தமிழகம் முன்னேறி வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதேபோல் நலம்பெற்று வீடு திரும்புவர்கள் விகிதம் 26.6% என்ற அளவில் உள்ளதாகவும், 29,997 பேரிடன் இதுவரை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இதனிடையே இன்று ஒரே நாளில் மட்டும் 82 பேர் நலம்பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்
தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா பாசிட்டிப் உறுதிசெய்யப்பட்ட 49 நபர்களில் 28 பேர் திருப்பூரை சேர்ந்தவர்கள் என்றும், 7 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். கொரோனாவுக்கு எதிரான பன்முக நடவடிக்கைகளில் தமிழகம் சிறந்து விளங்குவதாக கூறிய அமைச்சரிடம் ரேபிட் டெஸ்க் கிட்கள் கொள்முதல் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியும் கொரோனா பரிசோதனை கிட் கொள்முதல் பணிகளை முன்னெடுத்து செய்து வருபவருமான உமாநாத் அது பற்றி விளக்குவார் என அமைச்சர் விஜயபாஸ்கர் ஒதுங்கிக்கொண்டார். பின்னர் விளக்கமளித்த உமாநாத் ஐ.ஏ.எஸ்., ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழக அரசு அதிக விலைக்கு வாங்கவில்லை என்றும், மத்திய அரசு விலையிலேயே தான் மாநில அரசும் ஆர்டர் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
டெஸ்ட் கிட்களுக்கான விலையை தமிழக அரசு நிர்ணயிக்கவில்லை என்றும் மத்திய அரசு என்ன விலை நிர்ணயம் செய்துள்ளதோ அதன் படியே கொள்முதல் செய்யப்படுவதாக உமாநாத் தெரிவித்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர், 365 பேர் பூரண உடல்நலம் பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
     ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited