கொரோனா அறிகுறியா; தகவல் கொடுங்க!

சென்னை : கொரோனா அறிகுறி உள்ளவர்கள் குறித்து, வீட்டு உரிமையாளர்கள் தகவல் அளிக்கும்படி, உள்ளாட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, நாடு முழுவதும்ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த, பல துறைகளை இணைத்து, குழு அமைக்கப்பட்டு உள்ளது.வெளிநாடுகளில் இருந்து, பிப்.,15க்கு பின் வந்தவர்கள், முழுவதுமாக கண்காணிப்பிற்குள் உள்ளனர். வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களும், சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.எதிர்ப்பு

இந்நிலையில், டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு, கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டு உள்ளது. மிகவும் தாமதமாக அம்பலமான இந்த விவகாரத்தில், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பலர், அரசு தரப்பில் கண்டுபிடிக்கப்படும் வரை, வீடுகளில் குடும்பத்தினருடன் தங்கி யிருந்துள்ளனர். உள்ளூரில் தங்கள் சமூகத்தினரிடம், நேரடி சந்திப்புகளில் இருந்துள்ளனர். அதனால், தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் குடியிருப்புகளை சுற்றி, வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. உள்ளாட்சி அமைப்பினர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார துறையினர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், பல இடங்களில் கணக்கெடுப்பு பணிக்கு, அறியாமையில் உள்ள மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலைமையை சமாளிக்க, போலீஸ் பாதுகாப்புடன் கணக்கெடுப்பு பணியை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை

இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலும், மற்ற இடங்களிலும் கணக்கெடுப்பு பணியில், வீட்டு உரிமையாளர்களையும் சேர்க்க, உள்ளாட்சி அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும், தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியிருப்பவர்களில், காய்ச்சல், இருமல் பிரச்னை உள்ளவர்களின் விபரங்களை, அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.மாறாக, அரசுக்கு தகவல் தராமல், அலட்சியமாக இருந்தால், வீட்டு உரிமையாளர் மீது, தொற்றுநோய் பரவல் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என, உள்ளாட்சி மற்றும் சுகாதார துறையினர்எச்சரித்துள்ளனர்.
               © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited