சார்.. தயவுசெஞ்சு ஒரு நாளாவது கேப் குடுங்க.. கவலைபடாதீங்க தம்பி.. "இன்ஸ்டன்ட் நிவாரணம்" முதல்வர் செம

சென்னை: "சார்.. தயவுசெஞ்சு ஒரு நாளாவது கேப் குடுங்க ப்ளீஸ்.. என் மனைவி பிரெக்னென்ட்-ஆ இருக்காள்.. 9 மாசம்.. அவள்கூட யாருமே இல்லை.. தனியாக எப்படி அவள் ஹேண்டில் பண்ணுவா?" என்று ட்விட்டர்வாசி ஒருவர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்க, "செல்போன் நம்பர் குடுங்க தம்பி.. நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்" என்று பதிலளித்ததுடன், அதற்கான நடவடிக்கையையும் முதல்வர் எடுத்துள்ளார்!!


புதிய கட்டுபாடுகளுடன் லாக்டவுன் நீட்டிக்கபடுமா? இன்று அறிவிப்பு? 

கொரோனாவைரஸ் பரவல் தமிழகத்தில் ஊடுருவதற்கு முன்பிருந்தே தமிழக அரசு முன்னெச்சரிக்கை "நடவடிக்கைகள மேற்கொண்டு வருகிறது.. தீவிர தடுப்பு நடவடிக்கையை கையில் எடுத்து 144 உத்தரவையும் "பிறப்பித்து"வருகிறது.

இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் அசத்தலான வேலையை பார்த்து வருகிறார்.. நேரடி ஆய்வு, ஆலோசனை கூட்டம், செய்தியாளர் சந்திப்பு என றெக்கை கட்டி பறந்து ஒவ்வொன்றையும் மிக மிக கவனமாக கையாண்டு வருகிறார்.

முதல்வர் 
இதை தவிர, மணிக்கொருதரம் கொரோனாவைரஸ் குறித்த விவரங்கள், தகவல்கள், அறிவிப்புகள், அட்வைஸ்களை தன்னுடைய ட்விட்டரிலும் பதிவிட்டு வருகிறார். இதில் ட்விட்டர்வாசிகள் அதிமுக்கியமான கருத்து சொன்னால் அதையும் பரிசீலிக்கிறார்.. சரியானதாக இருந்தால் ஒப்புக்கொள்கிறார்.. அவசர உதவிகள் கேட்டாலும் தட்டாமல் உடனடியாக செய்கிறார் முதல்வர் எடப்பாடியார்.. அந்த வகையில் ட்விட்டர்வாசி ஒருவருக்கு ஒரு பேருதவி புரிந்து அனைவரையும் மலைக்க வைத்து வருகிறார்!


கர்ப்பிணி மனைவி
அந்த நபர் பெயர் ஃபயஸ் அர்ஷி.. இவர் முதல்வருக்கு பதிவிட்ட ட்வீட்டில், "சார்.. தயவுசெஞ்சு ஒரு நாளாவது கேப் குடுங்க ப்ளீஸ்.. என் மனைவி பிரெக்னென்ட்-ஆ இருக்காள்.. 9 மாசம்.. அவள்கூட யாருமே இல்லை.. நான் பக்கத்து மாவட்டத்துல மாட்டிக்கிட்டேன்.. இது முதல் பிரசவம்.. தனியாக எப்படி அவள் ஹேண்டில் பண்ணுவா? 108-க்கு கால் பண்ணாலும்கூட யாராவது இருக்கணும்.. பாஸ்-க்கு அப்ளை பண்ணியும் நோ ரெஸ்பான்ஸ்.. இது மெடிக்கல் எமர்ஜென்சி இல்லையா?" என்று கேட்டிருந்தார்.


பதில் ட்வீட் 
இதற்கு முதல்வர் எடப்பாடியார் பதிலளித்து ட்விட் போட்டிருந்தார்.. "உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி... நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்" என்று பதிலளித்திருந்தார்.

பெருமை 
இந்த பதிலை ஃபயஸ் அர்ஷி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. பதில் மட்டும் இல்லை.. முதல்வர் இது சம்பந்தமான நடவடிக்கையையும் துரிதமாக எடுத்துள்ளார்.. அதை பற்றி ஃபயஸ் குறிப்பிடும்போது, "தேங்க்யூ ஸோ மச் சார்.. எனக்கு பாஸ் வந்துருச்சு.. உங்களோட இவ்ளோ பிஸியான ஷெட்யூல்லயும் ரிப்ளை பண்ணியிருக்கீங்க.. உண்மையா ரொம்ப பெருமையாக இருக்கு.. ஒரே ஒரு ரிக்குவஸ்ட்.. இந்த மாதிரி இக்கட்டான சூழலில் இருக்க எல்லாருக்கும் பாஸ் குடுக்கணும்னு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. நெறைய மக்களுக்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லை" என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சோகம்
பிரசவம் சம்பந்தமாக எமர்ஜென்சி கோரிக்கையை ஃபயஸ் அர்ஷி வைத்திருந்த நிலையில் பல ட்விட்டர்வாசிகள் தங்கள் சோகத்தையும் பிழிந்து ட்வீட் போட்டு வருகின்றனர்.. "என்னோட அம்மா இறந்து விட்டார்கள் ..! ஆனா அவங்க இறுதி முகத்தை பார்க்க கூட முடியதவனாக இருக்கிறேன்..! வாழ்கையில் எந்த மகனுக்கு இப்படி நிகழ்வு நடக்க கூடாது" என்று கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

சம்பள விவகாரம் 
இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் சம்பள விவகாரத்தை சிலர் முதல்வரிடம் கொண்டு வந்துள்ளனர்.. "ஐயா தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கடந்த மாத சம்பளத்தை உறுதி செய்யுங்கள்.. பலபேரது நிலைமை கேள்விக்குறியாக உள்ளது..!" என்று ஒருவர் பதிவு போடவும், இன்னொருத்தர் வந்து "அப்போ தினக் கூலி மக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் வாழ்க்கை மிகக் கேள்விக் குறியாகியுள்ளது" என்று புலம்பி உள்ளார்.

   © All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited