தமிழகத்தில் 3ஆவது கட்டத்திற்கு நகரும் வாய்ப்பு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 8ஆக உள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என தெலுங்கானா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்தியாவில் முதல் மாநிலமாக ஒடிஸா மாநிலத்தில் ஊரடங்கு வரும் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.344 பேரது முடிவுகள் 
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 344 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. கொரோனா தடுப்பு பணிக்காக இதுவரை 101 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது. மக்கள் குறைந்தபட்சத் தொகையாக இருந்தாலும் நிதி வழங்கி கொரோனா பாதித்தோருக்கு உதவிட வேண்டும்.

2ஆவது நிலை 
கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். நிபுணர்கள் குழுக்கள் ஆலோசனையை பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் கொரோனா 2ஆவது நிலையில் உள்ளது.
சுகாதாரப் பணியாளர்
ஆனால் அது 3ஆவது கட்டத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. எனினும் அதை கட்டுப்படுத்த நாங்கள் தீவிரமாக உள்ளோம். கொரோனா பரிசோதனையை அதிகரிக்க 4 லட்சம் ரேபிட் கருவிகள் வாங்கி இருக்கிறோம். 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவதா என்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. 10ஆம் வகுப்பு தேர்வு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான தேர்வாகும். அனைத்து பணிகளுக்கும் இந்த தேர்வு அவசியாகிறது. அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு துணை நிற்போம்.நிதியுதவி 
கொரோனா பாதிப்பை யாரேனும் மறைத்தால் அவர்களுக்கு இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து காவலராக இருந்த அருண்காந்தி பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதியும் குடும்பத்தில் ஒருவருக்கு பணியும் வழங்கப்படும் என்றார்.
                         © All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED 


Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited