சென்னையில் இரண்டு பத்திரிக்கையாளர்களுக்கு இன்று கொரோனா உறுதி


*செய்தியாளர்களுக்கு பரிசோதனை*

*சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.*


*தமிழகத்தில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.*

 *சென்னையில் இரண்டு  பத்திரிகையாளர்களுக்கு இன்று  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன்  எதிரொலியாகவும் மற்ற பத்திரிகையாளர்களுக்கு கொரோனா  பரவுவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கையாகவும்    மண்ணடியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.*

*சென்னையில் உள்ள  40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு  இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.*

*நாளை முதல் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
 செய்தியாளர்: அமர்நாத்.R
    பட்டாபிராம்,  சென்னை
©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited