ஓய்வு நபர்களை ரேஷன் கடையில் நியமிக்க உத்தரவு

சென்னை : ரேஷன் கடைகளில், ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால், ஓய்வுபெற்ற ஊழியர்களை நியமிக்க, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், கோவிந்தராஜ், மாவட்ட இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கூட்டுறவு நிறுவனங்களில், வயது முதிர்வின் காரணமாக, ஊழியர்கள் ஓய்வு பெற்று உள்ளதால், பொது வினியோக திட்டம், அரசு திட்டம் போன்ற அத்தியாவசிய பணிகளை செயல்படுத்துவதில், தேக்க நிலை ஏற்படுகிறது. அவை, தொடர்ந்து நடப்பதுஇன்றியமையாதது.ஓய்வு பெற்ற ஊழியர்களை, தேவையின் அடிப்படையில், பொது வினியோக திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் இதர அவசர பணிகளுக்கு மட்டும், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும்.

அவர்களுக்கு, தினமும், 450 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
     © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited