அரசு பஸ்களில் முன்பதிவு எப்போ?

சென்னை : ஊரடங்குக்குப் பின், அரசு பஸ்களில் பயணிப்பதற்கான முன்பதிவு, இன்னும் துவங்கப்படவில்லை.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வரும், 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதனால், அரசு விரைவு பஸ்களில் பயணிக்கும் தேதியில் இருந்து, 60 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்யும் வசதி நிறுத்தப்பட்டது. ஊரடங்கு நாட்களில் பயணிக்கும் வகையில், முன்பதிவு செய்தோருக்கு, முன்பதிவுத் தொகை திருப்பி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வரும், 15ம் தேதிக்கு பின், ஊரடங்கு நிலை முடிந்து, இயல்பு நிலை திரும்பும் என்று, அனைவரும் நம்பியுள்ளனர். ஆனால், தமிழக அரசு விரைவு பஸ்களில், இதுவரை முன்பதிவு துவங்கப்படவில்லை.

இது குறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், இன்னும் கொரோனா பாதிப்பு பற்றிய முழுமையான விபரம் தெரியவில்லை. இந்த நிலையில், ஊரடங்கு முடிந்தாலும், தொலை துார பஸ்களை இயக்க அனுமதிக்கப்படுவது சந்தேகம்.மத்திய அரசு, பொதுப் போக்குவரத்தை முடிந்தளவு குறைத்து, பயணியர் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளை பின்பற்றும்படி, அறிவுறுத்தி உள்ளது.

எனவே, முன்பதிவு டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை. வரும், 15ம் தேதி பஸ்கள் இயக்குவது குறித்து, அரசு, இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அரசின் அறிவிப்புக்கு பின், முன்பதிவு தொடங்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
        © All Copyrights NEW TREND MEDIA Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited