அரிசி விலை உயராது ஆலை தரப்பு உறுதிஆரணி : ''மார்க்கெட்டில் அரிசி விலை உயராது,'' என, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்க, துணைத் தலைவர், நடராஜன் கூறினார்.


திருவண்ணாமலையில் அவர் கூறியதாவது:திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் களம்பூரில், 200க்கும் மேற்பட்ட, நவீன அரிசி ஆலைகள் உள்ளன. ஊரடங்கு உத்தரவால், சில நாட்கள் மூடப்பட்ட நிலையில், ஏப்., 1 முதல், மீண்டும் இயங்க துவங்கி உள்ளன.எரிபொருள் இருப்பு வைத்திருந்த, 25 சதவீத உரிமையாளர்கள், உற்பத்தியை தொடங்கி உள்ளனர். தவிடை எரிபொருளாக மாற்றி, அரிசி உற்பத்தி செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் அரிசி விலை உயரவில்லை.கடந்த மாதம், 25 கிலோ பொன்னி அரிசி, 1,300 ரூபாய், பாபட்லா, 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போதும் அதே விலை தொடர்கிறது.

10 நாட்களாக, அரிசி மொத்த வியாபாரிகள் பலர், கடை திறக்கவில்லை. இதனால், சில்லரை வியாபாரிகள் சிலர், விலையை உயர்த்தியிருக்கலாம். அரிசி தடையின்றி கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
     © All Copyrights NEW TREND MEDIA Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited