மே 4-ம் தேதி முதல் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம்... ஏர் இந்தியா அறிவிப்பு

சென்னை: மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் லாக்டவுன் கொண்டுவரப்பட்டதால் விமானம், ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் மே 3-ம் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வருவதால் மே 4-ம் தேதி முதல் உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவை தொடங்குவதாக தெரிவித்துள்ளது ஏர் இந்தியா.
மேலும், ஜூன் 1-ம் தேதி முதல் சர்வதேச விமானங்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உள்நாட்டு விமான டிக்கெட் முன்பதிவை தொடங்க ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மே 3-ம் தேதிக்கு பிறகு மத்திய அரசு எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கவுள்ளது எனத் தெரியவில்லை.
இதனிடையே வேறு எந்த விமான நிறுவனங்களில் இருந்தும் டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பான எந்த அறிவிப்புகளும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக குறைந்தது இன்னும் ஒரு மாதத்திற்காவது விமானம், ரயில், பேருந்து உள்ளிட்டவற்றில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited