திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் மற்றும் நமது போலீஸ் பத்திரிகை சார்பில் முக கவசம் மற்றும் கையுறை வழங்கப்பட்டது

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மக்கள் உரிமைகள் பாதுகாப்புக் கழகம் மற்றும் நமதுபோலிஸ் பத்திரிகை சார்பில் பொதுமக்களுக்கு முகக் கவசம் மற்றும் கையுறை வழங்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தையில் இன்று காலை மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் மாநிலத் தலைவர் டாக்டர். பொ. பாலசுப்ரமணியம் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கையுறை வழங்கப்பட்டது பொதுமக்களுக்கு வேண்டிய உபகரணங்களை மாவட்ட செயலாளர் ஜெயராஜ் அவர்களும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்களும்  வழங்கினர். தொடர்ந்து ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொட்டலம் மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ரஞ்சித் உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க எஸ் எம் டிராவல்ஸ் நாகராஜ் சங்கர் செய்தியாளர் தென்றல் சேகர் உட்பட அச்சு ஊடகத்துறை நண்பர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்திகளைச் சொல்லி துண்டறிக்கைகளை வழங்கி பிரசாரம் செய்தனர்.

  செய்தியாளர் துல்கர்னி
  மடத்துக்குளம் திருப்பூர் மாவட்டம்

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited