திருமுல்லைவாயல் பகுதியில் முன்னாள் கவுன்சிலர் முல்லை K பலராமன் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கினார்

ஆவடி மாநகராட்சி எட்டாவது வார்டான  திருமுல்லைவாயல். அறுமான் பகுதியில்  ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுமார் 250 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசியும்,  5 கிலோ காய்கறிகளும், மக்கள் தொண்டரும், முன்னாள் கவுன்சிலருமான   முல்லை K பலராமன் வழங்கினார்.
அதை ஆவடி தாசில்தார் அவர்கள் துவக்கி வைத்தார். பொது நல சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சுப்பிரமணி வக்கீல், முல்லை. K.பாலாஜி மற்றும் வழக்கறிஞர் முல்லை இராதமிழ்வேந்தன், தென்றல் ராஜேஷ், ஜேம்ஸ்,  அறிவழகன்,  முரளி, ஆனந்த் குமார் உள்ளனர்.
 பின் தென்றல் நகர் பகுதியில் 200 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி பொது நல சங்க நிர்வாகிகள் சாமிநாதன்,  கார்த்திக், அவர்களின் தலைமையில் மக்கள் சேவகர் முல்லை. கே. பலராமன் வழங்கினார்


 செய்தியாளர்: AJ விக்டர்
 பட்டாபிராம்,  சென்னை

©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited