திருப்பூர் மாவட்டத்தில் 11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் நவீன கிருமிநாசினி

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ பதினோரு லட்சத்து 80 ஆயிரம் செலவில் நவீன கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம் வாங்கப்பட்டு உள்ளது .

கிருமிநாசினி இயந்திரத்தை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெய ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன்  ஒன்றியக்குழு துணைத் தலைவர் சண்முக வடிவேலு ஆகியோர் தலைமையில் கல்லாபுரம்பப ஊராட்சியில் நவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செல்வராசு,
ஒன்றிய ஆணையாளர்கள் சுப்பிரமணியம், ஜீவானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுமதி கார்மேகம், தும்பலபட்டி செல்வராஜ் , கேவி சங்கரன், குருவம்மாள் சௌந்தரராஜன் ,ராஜலட்சுமி, அருள்குமார், தங்கமணி ஜெயபிரகாஷ் மாவட்ட குழு உறுப்பினர் ஜனார்த்தனன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி பழனிசாமி, துணைத் தலைவர் ஷேக் பரீத் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழக கிளைச் செயலாளர்கள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வாளவாடி ஒன்றிய குழு உறுப்பினர் கமலம் நவநீதகிருஷ்ணன் சார்பில் திராவிட முன்னேற்ற கழக தலைவர் தளபதி அவர்கள் ஆணைக்கிணங்க ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சண்முக வடிவேலு ஒன்றிய செயலாளர் புவியரசு பொதுக்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் 300க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.

     செய்தியாளர்: துல்கர்ணி
       மடத்துக்குளம், திருப்பூர் மாவட்டம்
 © All Rights NEW STAR TREND Private Limited 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited