பூந்தமல்லி இன்ஜினியருக்கு கொரோனா அறிகுறி அடுக்குமாடி குடியிருப்பு

பூந்தமல்லி: பூந்தமல்லி கரையான் சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இன்ஜினியர் ஒருவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மும்பை சென்றுவிட்டு சென்னை திரும்பினார் அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தும் இருந்து வந்துள்ளார்.
.


 இந்நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சலில் இருந்து வந்தது இதை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது இதையடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்ததும் வருவாய்துறை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்கள் அந்த நபரை பரிசோதனை செய்து சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அவருக்கு அறிகுறி இருக்குமோ என்ற அச்சத்தில் பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர் மேலும் ஒன்பது மாடி கொண்ட அந்த குடியிருப்பில் 54 குடும்பங்கள் உள்ளனர் இதை அடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது மேலும் அவர் இதுவரை எங்கெல்லாம் சென்று வந்தார் யாரையெல்லாம் சந்தித்தார் என்ற பட்டியலையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
       © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited