தனிமைப்படுத்தப்பட்ட வாலிபர் கடித்துக்குதறிய மூதாட்டி பரிதாப சாவு

போடி :தேனி மாவட்டம் போடி கருப்பசாமி கோவில் சாலையை சேர்ந்தவர் சுந்தர் (33 பெயர் மாற்றப்பட்டுள்ளது )வியாபாரி தொழில் நிமித்தமாக இலங்கைக்கு சென்ற அவர் பத்து நாட்களுக்கு முன் மதுரை வந்தார்.


தடுப்பு நடவடிக்கையாக அவரை தனிமைப்படுத்தி போடியில் உள்ள அவரது வீட்டில் கண்காணிப்பில் வைத்தனர் தடுத்ததால் கோபத்தில் இருந்த இவர் நேற்று முன்தினம் மாலை திடீரென ஆடைகளை அவிழ்த்துப் போட்டு வீட்டை விட்டு வெளியே நிர்வாணமாக ஓடினார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி அவர் பக்த சேவா தெருவில் இங்கு இருந்த மூதாட்டி நாச்சியம்மன் (70) என்பவரை கீழே தள்ளி கழுத்தில் கடித்தார சம்பவ இடத்திற்கு வந்த போடி நகர போலீசார் அவரை பிடித்து போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மூதாட்டி நாச்சி அம்மாலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை நாச்சியம்மன் பரிதாபமாக இறந்தார் போடி நகர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரிக்கின்றனர்
       © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited