பணம் காய்ச்சி மனமாற்றத்தின் முதல் புள்ளி ! !

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளன ஆனால் நியாயமாக நேர்மையாக நெடுங்கால நன்மைக்கும் நல்ல பெயருக்கும் என சில பழைய முறைகள் உள்ளன இவற்றை தான் நாம் விவாதிக்கப் போகிறோம் செல்வம் சேர்ப்பது பற்றி நிறைய நூல்கள் படித்து இருக்கிறேன் குறிப்பாக சில இனத்தவர்கள் மற்றவர்களை விட பணம் விஷயத்தில் புத்திசாலித்தனமாக உள்ளதை வரலாற்றில் தொடர்ந்து படிக்கிறோம் பாபிலோன் வியாபாரிகள் பற்றிய புத்தகம் உள்ளது யூதர்கள் மிகச்சிறிய மக்கள் தொகையாக வாழ்ந்தபோதும் என்றுமே செல்வந்தராக இருந்திருக்கின்றனர் வடமாநில மார்வாடிகளும் நம் மாநில நகரத்தார் சமூகமும் செல்வம் சேர்ப்பதில் தங்களை நிரூபித்தவர்கள். நாம் இவர்கள் எல்லாரிடமும் உள்ள பொது அம்சம் என்ன என்பதை மட்டும் பார்ப்போம் அதை நாம் பின்பற்ற முடியுமா என்று யோசிப்போம் இவர்கள் அனைவருக்கும் உள்ள பொது குணம் சேமிக்கும் குணம் இன்னும் தெளிவாக சொன்னால் சேமிப்பு மேல் உள்ள நம்பிக்கை நம் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கை எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் அதை தொடர்ந்து செய்யும் போது உள்ள கணக்கையும் காலப்போக்கில் ஏற்படும் மதிப்பு கூடலையும் உணர்ந்தவர்கள்
 சேமிப்பு என்பது எளியவர்களுக்கு என்ற எண்ணத்தை உடையவர்கள் அதை ஒரு எளிய முதலீடாக செய்பவர்கள் இவர்கள் மற்ற செலவுகள் மற்றும் முதலீடுகள் எல்லாம் தனி இன்றைய வருமானம் எவ்வளவு எவ்வளவு சேமிப்பு என்று தெளிவாக யோசிப்பவர்கள் சேமிப்பு பணத்தில் மட்டுமில்லாமல் எல்லா வளங்களையும் சேமிக்க வேண்டும் என்ற தீர்க்கமான பார்வை உள்ளவர்கள்
 கொஞ்சம் பொதுப்படையாக யோசித்தால் நம் நாட்டில் அனைத்து மத்திய வர்க்க மக்களிடம் ஒரு காலத்தில் சேமிக்கும் பழக்கம் இருந்தது குழந்தைகளுக்கு உண்டி இருந்தது எல்லா பெண்களும் அஞ்சரி பெட்டிகளில் கொஞ்சம் தனி கணக்கு வைத்திருப்பார் நல்லது கெட்டது என்றால் சொந்தங்கள் முறை செய்து பெரிய செலவுகளை சமன் செய்யும் ஒரு வீடு முக்கியம் என்பது ஏதோ ஒரு வடிவத்தில் சேமிப்பு தொடர்ந்தபடியே இருக்கும் வேலைக்கு செல்பவர்கள் மாதம் மாதம் சேமித்து ஒரு பொருள் வாங்குவது அன்றைய இயல்பு கடன் என்பது நெருக்கடி நிலையில் மட்டுமே கையாளப்பட்ட ஒரு விஷயம் மேற்கத்திய கலாசாரம் கடனட்டை அறிமுகப்படுத்தியது சம்பாதித்த பணத்தில் செலவு செய்வது போய் செலவு செய்த பணத்தை திருப்பி கட்ட சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டோம் என்று தெளிவாக யோசித்து சேமிப்பு அவர்கள் இருக்கின்றனர் சேமிப்பு பழக்கம் இளைய வயதில் ஏற்பட்டுவிட்டால் 20 25 ஆண்டுகளில் அவர்கள் பெரிய முதலீடுகள் செய்ய இயலும் கடன் வாங்குவதற்கு முன் சேமிக்கும் பழக்கம் இருக்க வேண்டும் சம்பாதிக்க துவங்கிய திருமணமாகும் வரை உள்ள பருவத்தில் ஆதாரம் தவிர நல்ல தொகையை சேமிப்பு அவர்கள் பிற்காலத்தில் பெரிய நன்மைகள் பெறுவர் சேமிப்பு பழக்கம் வர சில அடிப்படை மனோபாவங்கள் ஏற்படவேண்டும் சில தெளிவான நம்பிக்கைகள் முக்கியம் சேமிப்பு எந்த பகட்டும் இல்லாத ஒரு விஷயம் செலவு செய்கையில் சமூகம் அங்கீகரிப்பு கிட்டும் புது காரை வாங்கி வாசல் நிறுத்துங்கள் பக்கத்து வீட்டுக்காரர் புதியதாக சார் என்று அழைக்க துவங்குவார் நீங்கள் அணியும் பிராண்டட் உடைகளை உங்கள் நட்புகள் கொண்டாடும் தொலைதூர சுற்றுலா சென்று படங்கள் பதிவிட்டால் சமூக வலைதளங்களை கமலும் ஆனால் அனைத்தும் உங்களை அதிக வட்டி கடன் பழக்கத்திற்கு இட்டுச்செல்லும் நான் 1998ல் முதல் முதலாக வெளிநாட்டுக்காரர் பெருமையுடன் கடனில் வாங்கிய அதே நாளில் என் நண்பர் அதே விலைக்கு பெருங்குடியில் ஒரு பிரவுன் வாங்கினார் இன்று அது 50 மடங்கு மதிப்புள்ள சொத்து அவருக்கு என் காரை 5 ஆண்டுகளில் பாதி விலைக்கு விற்று அடுத்த பெரிய காரெட் பன்மடங்கு கொடுத்து வாங்கினேன்
 ஒரு கார் கம்பெனியில் வேலை செய்யும் பகட்டான மேலாளரான எனக்கு அந்த புதிய கார் மரியாதையே தந்ததாக நம்பினேன் கம்பெனி பஸ்சில் பயணம் செய்த அந்த நண்பர் நான்கு ஆண்டுகள் கழித்து அதே சார்ஜரை சேமித்த பணத்தில் கடன் இல்லாமல் முழு தொகை கொடுத்து வாங்கினார் யார் பணவிஷயத்தில் அறிவாளி என நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள் செலவு செய்வதற்கு பல நேரங்களில் குடும்ப நிர்பந்தங்கள் இருக்கும் உறவு பராமரிப்புக்கு நிறைய செலவாகும் நம் வாழ்க்கையில் மனிதர்கள் அதிகமாக அதிகமாக எதிர்பாராத செலவுகளும் அதிகமாகும் அதனால்தான் சொல்கிறேன் குடும்ப வாழ்க்கை துவங்கும் முன் உங்கள் சேமிப்பு வாழ்க்கை துவங்கட்டும் தொகை சிறியதாக இருக்கலாம் ஆனால் அந்த பழக்கம் முக்கியம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தால் 9000 மட்டுமே வருமானம் வந்ததாக நினைத்து அந்த ஆயிரம் ரூபாய் சேமிக்க மாற்றத்தின் முதல் புள்ளி அது !!
    © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited