காஞ்சிபுரத்தில் முக கவசம் தயாரிக்கும்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் பரவாமல் தடுப்பதற்காக அணிந்து கொள்ளக்கூடிய முக கவசம் தயாரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.


 நோய்த்தொற்று பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது இதையடுத்து நாடு முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இதையொட்டி காஞ்சிபுரம்மாவட்டம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கவசங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது இதை அடுத்து எஸ்பி சாமுண்டீஸ்வரி உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை துறையில் பணியாற்றும் பெண் காவலர்களில் தையல் தெரிந்த ஐந்துபர் கவசங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஆயுதப்படை டிஎஸ்பி மலைசாமி நேரடி மேற்பார்வையில் 6000 கவசங்கள் தயாரிக்கும் பணி ஆயுதப்படை பிரிவு வளாகத்தில் நடக்கிறது இந்த முக கவசங்கள் அனைத்தும்  இரண்டடுக்கு கொண்டதாகவும் பயன்படுத்திய பிறகு மீண்டும் துவைத்து பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் காட்டன் துணியில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
       © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited