762 பேரை தனிமைப்படுத்தி தொடர் கண்காணிப்பு கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 762 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கைகழுவுதல் முறை முக கவசம் அணிய வலியுறுத்தி தொடர் உடல் நலக்குறைவால் பாதிக்கும் போது அதில் தற்காத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்படுகிறது இதற்கிடையில் மத்திய மாநில அரசுகளின் அறிவிப்பின்படி வெளிநாடு வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறையில் தங்களை பதிவு செய்துகொண்டு மருத்துவ உதவிகளை நாடலாம் என அறிவிக்கப்பட்டது இதையொட்டி காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து அவர்களின் வருவாய் துறையினர் விசாரித்து இதுவரை 762 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு டாக்டர்களால் தினமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
       © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited