கடைக்காரர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

மாமல்லபுரம் :கொரோனா  வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 ஆனால் மாமல்லபுரம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் காய்கறி கடை மளிகை கடைகளில் கூட்டம் அதிகமாக கூடுகிறது இதனை தடுக்க வேண்டும் என கடைக்காரர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி கூட்டம் குறையவில்லை இந்நிலையில் மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் போலீசார் பேரூராட்சியில் உள்ள கடைகளுக்கு நேரில் சென்று சாக்பீஸ் மூலம் ஒரு மீட்டர் அளவுக்கு வட்டமிட்டு பொதுமக்களை வரிசையில் உள்ள அனுமதிக்க வேண்டும் என கூறினர் இதை கடைப்பிடிக்காத கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர் மேலும் ஒலிபெருக்கி மூலம் போலீசார் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது காய்கறி மளிகை கடை மருந்தகம் செல்பவர் மட்டுமே வரலாம் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார்
        © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited