ஆவடி அருகே தனியார் பல்பொருள் அங்கன்வாடியில் தீ விபத்து


ஆவடி காமராஜர் சிலை அருகே இயங்கி வரும் தனியார் சூப்பர் மார்க்கெடில் ஏற்பட்ட தீடீர் தீவிபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.


ஆவடியில் இயங்கிவரும் DR சூப்பர் மார்க்கெடில் அதிகாலையில் நிகழ்ந்த மின்கசிவுனால்  தீவிபத்து ஏற்பட்டது. முதல் தளத்தில் மளிகை பொருட்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தளத்தில் கட்டில், பீரோ போன்ற பர்னீச்சர் பொருட்களும் இருந்தன. அதில் முதல் தளத்தில் பிடித்த தீ மளிகை பொருட்கள் எரிந்து இரண்டாவது தளத்தில் உள்ள பர்னீச்சர் பொருட்களிலும் லேசான தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள், அம்பத்துர் தீயணைப்பு வீரர்கள் நான்கு வாகனங்களில் வந்து தீயை போராடி அணைத்தனர். இதில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆவடி முக்கிய இடங்களில் நடந்த தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
         © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited