சென்னை போருரில் 40 படுக்கைகள் கொண்ட கொரோனா நோய் தடுப்பு சிகிச்சை மையம்

சென்னை போருரில் 40 படுக்கைகள் கொண்ட கொரோனா நோய் தடுப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி உட்பட்ட வளசரவாக்கம் மண்டலம் 11 ல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் தீயணைப்பு கருவிகள் மூலம்  கிருமி நாசினி தெளிப்பதை துவக்கி வைத்த அவர்.அங்கு தூய்மை பணியாளர்களிடமிருந்த கிருமி நாசினி கருவியை வாங்கி தோளில் மாட்டிக் கொண்டு  இரண்டு தெருக்களில் அதிகாரிகளுடன் கிருமி நாசினி தெளித்தார்.இதனை தொடர்ந்து போருரில் உள்ள நகர்புற சமுதாய மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்
போருரில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில்   கொரோனா நோய் தடுப்பிற்கு 40 படுகைகளுடன் வெண்டிலேட்டர் வசதியுடன்  தீவிர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்ற அவர் இந்த மருத்துவமனையில் அரசு மருத்துவர்களுடன் தனியார் மருத்துவர்களும் செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும்  கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு குறுந்தொழில் முனைவோருக்கு தமிழக அரசு சார்பில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவிற்கு பின்னும் வெளியே சுற்றி திரியும் பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  எச்சரித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சென்னை மாநகராட்சி மண்டலம் 11ல் நேபாளில் இருந்து வந்த 17 உட்பட
 243 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
      © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited